அதிகரித்து வரும் க்யூஆர் கோடு மோசடி - சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!
அண்மையில் அதிகரித்து வரும் க்யூஆர் கோடு மோசடி பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
க்யூஆர் கோடுகள், மிகத் துல்லியமாக செயல்படுகின்றன. அதனை நமது ஸ்மார்ட்போன்களில் ஸ்கேன் செய்ததும் அதன் யூஆர்எல்- ஐ ஒரு விநாடியில் காட்டி விடுகிறது. அந்த யூஆர்எல் மூலம், ஒரு இணையதளத்துக்கோ அல்லது செயலிக்கோ அல்லது ஒரு வங்கிக் கணக்கு எண்ணுக்கோ நேரடியாக சென்றுவிடலாம். க்யூஆர் கோடு மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் போது, நேரடியாக வங்கிக் கணக்கைப் போட்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது நேரிடும் தவறுகள் தவிர்க்கப்படலாம்.
இதையும் படியுங்கள் : இதயங்களை வென்ற ‘சொக்கத்தங்கம்’ விஜயகாந்த் இறுதி ஊர்வலம் | ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுக கண்ணீர் அஞ்சலி…
இனி க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்யும் போதும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில், இளைஞர் ஒருவர் க்யூஆர் கோடு மோசடி மூலம் ரூ.50 ஆயிரத்தை இழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய வீட்டு உபயோகப் பொருள் ஒன்றை விற்பனை செய்ய விளம்பரம் செய்திருந்த அந்த நபரிடம், மோசடியாளர் பேசி, பொருளை தான் வாங்கிக் கொள்வதாகவும், ஒரு க்யூஆர் கோடை தாம் அனுப்புவதாகவும், அதனை இளைஞர் ஸ்கேன் செய்தால், உடனடியாக அவரது வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும் என்று கூறி க்யூஆர் கோடை அனுப்பியிருக்கிறார். அந்த க்யூஆர் கோடு இளைஞர் ஸ்கேன் செய்ததும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற மோசடியாளர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.