சையது மோடி பேட்மிண்டன் தொடர் | சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!
சையது மோடி பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் டாய் விங்கை 21-15, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், பி.வி.சிந்து அரையிறுதியில் சக நாட்டு வீராங்கனையான உன்னாட்டி ஹூடாவை எதிர்கொண்டு விளையாடினார். இந்நிலையில், சையது மோடி பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையும் படியுங்கள் : புஷ்பா 2 திரைப்படத்தின் FDFS – ஒரு டிக்கெட் விலை ரூ. 3000!
அதேபோல் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் நுயென் ஹாய் டாங்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் சாம்பியன் பட்டம் வென்றார்.