For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"புட்ட வச்ச..." #Sir படத்தின் 4வது பாடல் வெளியானது!

08:27 PM Sep 24, 2024 IST | Web Editor
 புட்ட வச்ச      sir படத்தின் 4வது பாடல்  வெளியானது
Advertisement

விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தில் இடம்பெற்றுள்ள புட்ட வச்ச எனும் பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார். முதலில் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படம் பின்னர் சார் என மாற்றப்பட்டது. படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் படமாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னரே கன்னிமாடம் என்னும் படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் 2வது படமாகும். கன்னிமாடம் படம் வர்த்தகரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் சினிமா வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது பாடலான 'புட்ட வச்ச' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை நாட்டுப்புற பாடகர் ஆந்தைகுடி இளையராஜா எழுதி, அவரே பாடியுள்ளார்.

Tags :
Advertisement