புஷ்பா 2 படத்தின் டீசர் - புதிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
07:14 PM Apr 07, 2024 IST
|
Web Editor
இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசரை வருகிற ஏப்.8-ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புஷ்பா முதல் பாகம் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது கலந்துகொண்டு பேசிய அல்லு அர்ஜுன் “புஷ்பா படத்தின் மூன்றாவது பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான சுவாரஸ்யமான யோசனைகள் எங்களிடம் உள்ளன” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
புஷ்பா 2 படத்தின் டீசர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம்.
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் இடண்டாம் பாகத்திற்கான டீசர் நாளை காலை 11:07 க்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Article