செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
06:58 AM Nov 01, 2025 IST | Web Editor
Advertisement
வடகிழக்கு பருவமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி விடப்பட்ட விடுப்புக்கு ஈடாக சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று தேர்தல் கூட்டம் நடைபெற உள்ளதால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது.
Advertisement
இதன் காரணமாக சாவடி நிலை அலுவர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்று நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார்.