Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வசூலில் மாஸ் காட்டும் #Pushpa2... 14 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

08:01 AM Dec 21, 2024 IST | Web Editor
Advertisement

‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான 14 நாட்களில் ரூ.1508 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.

மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.

இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்பட்டது. இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான 14 நாட்களில் ரூ.1508 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
Allu arjuncinemamoviemovie updatenews7 tamilpushpa 2Pushpa2 The RuleRashmika Mandanna
Advertisement
Next Article