For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புஷ்பா 2 படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா..புஷ்பா..’ பாடல் - நாளை வெளியாகிறது!

07:01 PM Apr 30, 2024 IST | Web Editor
புஷ்பா 2 படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா  புஷ்பா  ’ பாடல்   நாளை வெளியாகிறது
Advertisement

புஷ்பா 2 படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா..புஷ்பா..’  பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா.  இந்த படம் தமிழ்,  தெலுங்கு,  இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.

கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.  இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா திரைப்படம்.

இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.  அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில்  ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’  பாடல் நாளை (மே 1) மாலை 5:04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement