For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை - அப்படி என்னதான் இருக்கிறது ரத்னா பந்தரில்?

08:57 PM Jul 14, 2024 IST | Web Editor
பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை   அப்படி என்னதான் இருக்கிறது ரத்னா பந்தரில்
Advertisement

பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய பகுதியான இந்த ரத்னா பந்தரில் என்னதான் இருக்கிறது என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிசா மாநில அரசு நியமித்த உயர்நிலைக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது. இதன்படி இன்று பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த அறை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாக சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்கள் பூதாகரமாக பேசப்பட்டன. தற்போது ஆட்சியை பிடித்துள்ள பாஜக முன்னர் ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தை தீவிரமாக பரப்புரை செய்தது.

இந்த நிலையில்  46 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிற்பகல் 1:28மணிக்கு பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்போடு பொக்கிஷ அறையை திறந்தனர். ரத்னா பந்தர் எனும் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை தொடங்க உள்ளது; அனைத்து பணிகளும் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ரத்னா பந்தரில்?
  •  ஒடிசா மாநிலம் பூரியில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோயிலில் பல்வேறு கால கட்டங்களில் ஆட்சி செய்த மன்னர்கள் கோயிலுக்கு ஆபரணங்களை காணிக்கையாக அளித்துள்ளனர்.
  • 2022ம் ஆண்டின் கோவிலின் உரிமைகள் பதிவின்  ரத்னா பந்தரின் உள் அறையில் உள்ள பிதாரா பந்தரில் 180 வகையான ஆபரணங்கள் உள்ளன. மேலும்  இதில் 74 வகையான தூய தங்க ஆபரணங்கள் அடங்கும்.  இவற்றில் உள்ள சில ஆபரணங்களின் எடை 100 துலாம் (1.2 கிலோ) க்கும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இதுபோல வைரங்கள், மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்கள் மற்றும் பல அரிய ரத்தினங்கள் உள்ளன.
  • தங்கம், வெள்ளி, வைரங்கள், நீலமணிகள், முத்துக்கள், மாணிக்கங்கள் போன்ற விலையுயர்ந்த கற்கள் மற்றும் பிற அரிய ரத்தினக் கற்கள் போன்ற பொருட்கள் நிறைந்த குறைந்தது 15 மரப்பெட்டிகளில் அங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
  • பூரியை ஆட்சி செய்த மன்னனிடம் சரணடைந்த அரசர்களின் கிரீடங்கள், போரின் மதிப்புமிக்க போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களும் அந்த அறையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஜகந்நாதருக்காக தங்கத்திலான குண்டலமும் (காதணிகள்), சிட்டா (நெற்றியில் உள்ள குறி) போன்ற வைரம், ரத்தினம் உள்ளிட்ட நகைகள் வட இந்தியாவிலிருந்து வந்த பக்தர்கள் நன்கொடையாக அளித்ததாக ஜெகநாதர் கோயிலின் முன்னாள் நிர்வாகி ரவீந்திர நாராயண் மிஸ்ரா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Tags :
Advertisement