For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை!

07:19 PM Jul 14, 2024 IST | Web Editor
46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை
Advertisement

46ஆண்டுகளுக்கு பிறகு  பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை  திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிசா மாநில அரசு நியமித்த உயர்நிலைக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது. இதன்படி இன்று பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த அறை திறக்கப்பட்டுள்ளது.

பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில்  குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது கோயில் நிர்வாகத்திடம் இந்தப் பரிந்துரையை வழங்கிய பின்னர் அதனை ஒடிஷா அரசிடமும் சமர்பித்தது.

கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாக சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்கள் பூதாகரமாக பேசப்பட்டன. தற்போது ஆட்சியை பிடித்துள்ள பாஜக முன்னர் ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தை தீவிரமாக பரப்புரை செய்தது.

இந்த நிலையில்  46 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிற்பகல் 1:28மணிக்கு பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்போடு பொக்கிஷ அறையை திறந்தனர். ரத்னா பந்தர் எனும் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை தொடங்க உள்ளது; அனைத்து பணிகளும் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்னா பந்தரை திறப்பதற்கு பல்வேறு 'சேவா' நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுக்கள், ஏஎஸ்ஐ அதிகாரிகள், ஸ்ரீ கஜபதி மகாராஜின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுப்பர். இந்த நிகழ்வின் முழு நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.

ரத்னா பந்தரில் உள்ள மதிப்புமிக்க பொருட்களைத் திறப்பதற்கும் , கணக்கெடுப்பதற்கும் மூன்று வழிமுறைகள் பின்பற்றப்படும்.  முதலாவது வெளிப்புறத்தில் உள்ள  ரத்னா பந்தரைத் திறப்பது. இதனைத் தொடர்ந்து அங்கேயே ஒரு தற்காலிக ஸ்டிராங் ரூம் அமைக்கப்படும். ரத்னா பந்தரிலிருந்து ஸ்டிராங் ரூமிற்கு மாறியதும் அங்கே கணக்கிடப்படும்” என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement