Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மனித விரலைத் தொடர்ந்து பூரான்! ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தது ஒரு குத்தமா?

03:21 PM Jun 16, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த தீபாதேவி என்ற பெண் தனது 5 வயது மகனுக்கு மாம்பழ மில்க் ஷேக் செய்வதற்காக ஆன்லைன் டெலிவரி தளமான ப்ளிங்கிட் மூலம் அமுல் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்திருக்கிறார். ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதும் அதனை திறந்து பார்த்துள்ளார். அதனை திறந்தவுடன் ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானைக் கண்ட தீபா தேவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் ஆர்டர் செய்த டெலிவிரி தளத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற ப்ளிங்கிட் அமுல் தரப்பின் பிரதிநிதி இந்த பிரச்னை குறித்து பேசுவார் என உறுதியளித்து ஐஸ்கிரீமிற்கான தொகையையும் திருப்பி தந்துள்ளது. ஆனால் அமுல் நிறுவனத்திடமிருந்து தனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை என இதுதொடர்பான வீடியோவை தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த விடியோ தற்போது இணயைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த விடியோயும் இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
AmulBlinkitCantipedeice cream
Advertisement
Next Article