பஞ்சாப் Vs டெல்லி - மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
நடப்பு ஐபில் தொடரின் 58வது போட்டி இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் இன்று(மே.08) நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி அணியை எதிர் கொள்ளவுள்ளது.
பஞ்சாப் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரு முடிவில்லா போட்டி அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 15 புள்ளிகளுடம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே போல் டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரு முடிவில்லா போட்டி அடங்கும். இதன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் பிளே ஆஃப் ரேஸில் இருப்பதால் இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன. இந்த நிலையில் தரம்சாலா மைதானத்தில் மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.