#Punjab | சட்டமன்ற உறுப்பினர் அன்மோல் ககன் மான் ஆம் ஆத்மி குறித்து பேசியதாக பரவும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Vishvas News‘
அன்மோல் ககன் மான் ஆம் ஆத்மி அல்லது பகவந்த் மான் கட்சி பற்றி பேசியதாக வைரலாகி வரும் வீடியோ உண்மையா? என்பது குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியும், எம்.எல்.ஏ.வுமான அன்மோல் ககன் மானின் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆசிரியர்களின் வேலைகள் குறித்து பேசுவதைக் கேட்க முடிகிறது. தற்போது அன்மோல் ககன் மான், ஆம் ஆத்மி கட்சியை பற்றி பேசியதால், சிலர் இந்த வீடியோவை சமீப காலமாக பகிர்ந்து வருகின்றனர். விஸ்வாஸ் நியூஸ் வைரலான கிளிப்பை ஆராய்ந்து அது தவறாக வழிநடத்தும் தகவல் என கண்டறியப்பட்டது.
அதில், 2021-ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற ஆசிரியர்களின் தர்ணாவில் அன்மோல் ககன் மான் கலந்துகொண்ட வீடியோ வைரலானது எனவும், அந்த வீடியோவில் அவர் காங்கிரஸ் அரசை பற்றி பேசியுள்ளதாகவும், மக்கள் தற்போது பழைய வீடியோக்களை தவறான உரிமைகோரல்களுடன் பகிர்ந்து வருவதும் கண்டறியப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான வீடியோ, “சமூக ஊடகக் குழு பர்னாலா" என்ற முகநூல் பக்கம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவில் ப்ரோ பஞ்சாப் டிவியின் மைக்கை காணமுடிகிறது. முதலில் புரோ பஞ்சாப் டிவியில் இந்த வீடியோவை தேடினோம். அசல் வீடியோவை 16 ஜூன் 2021 அன்று Pro Punjab TV முகநூல் பக்கத்தில் கண்டறியப்பட்டது. தகவலின்படி, ஆசிரியர்களின் உள்ளிருப்புப் போராட்டத்திற்கு வந்த அன்மோல் ககன் மான், வைரலான வீடியோவின் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் காணலாம். அந்த வீடியோவில், அன்மோல் ககன் மான், ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி அல்ல, சங்கோ காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுகிறார்.
வைரலான வீடியோ தொடர்பான செய்திகளை ஜீ நியூஸ் இணையதளத்திலும் காணமுடிந்தது. 16 ஜூன் 2021 அன்று வெளியிடப்பட்ட செய்தியில், "ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்கு வந்த அன்மோல் ககன் மான், பஞ்சாப் மக்கள் தேர்தலில் கேப்டன் அரசாங்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்” என்று கூறினார். வீடியோ தொடர்பான கூடுதல் அறிக்கைகளை இணைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, தவறான கூற்றுகளுடன் வீடியோவை வைரலாக்கிய பக்கம் ஆராயப்பட்டது. விசாரணையில், இந்தப் பக்கத்தை 4 ஆயிரம் பேர் பின்தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டது.
முடிவு:
விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் வைரலான வீடியோ தவறான கருத்துடன் வழிநடத்துவதாக கண்டறியப்பட்டது. மேலும், வீடியோ பழையது எனவும், அன்மோல் ககன் மான் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சி பற்றி பேசவில்லை எனவும் நிறுபணமானது. எனவே, தவறான உரிமைகோரல்களுடன் பழைய வீடியோக்களை மக்கள் பகிர்வது கண்டறியப்பட்டது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.