Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2025-26 பஞ்சாப் பட்ஜெட் - அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா சட்டமன்றத்தில் தாக்கல்!

2025-26 ஆம் ஆண்டுக்கான பஞ்சாப் மாநில பட்ஜெட்டை அம்மாநில நிதிமைச்சர் சட்டமன்றத்தில் ஹர்பால் சிங் சீமா தாக்கல் செய்துள்ளார்.
03:45 PM Mar 26, 2025 IST | Web Editor
Advertisement

பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, இன்று(மார்ச்.26)  2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அம்மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தின் மூன்றாவது பட்ஜெட்டாகும். மொத்த பட்ஜெட் தொகையாக  ரூ.2.36 லட்சம்  கோடி என நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா அறிவித்தார். இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 15 சதவீதம் அதிகம்.

Advertisement

பஞ்சாப் மாநில பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்.

விவசாயிகளுக்கு மின்சார மானியம் வழங்க, ரூ.9992 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கான சுகாதார பட்ஜெட் சுகாதார பட்ஜெட் தொகை ரூ.704 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலைக்கு  ரூ.250 கோடி, பால் உற்பத்தியாளர்களுக்கு உதவி வழங்க ரூ.100 கோடி, காடுகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்காக ரூ.281 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல் மேம்பாடு மற்றும்  உள்கட்டமைப்புகளுக்கான அறிவிப்பில், தொழில்களை ஊக்குவிக்க ரூ. 250 கோடி, சாலை மற்றும் பாலம் கட்டுமானம் பணிக்கு ரூ.855 கோடி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்காக ரூ.1614 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வித் துறையிகளுக்காகான பட்ஜெட் அறிவிப்பில், காப்பீடு மற்றும் சிகிச்சை வசதிகளுக்காக ரூ.268 கோடி, கல்வித் துறைக்கு ரூ.17925 கோடி, மத சுற்றுலாவை மேம்படுத்த ரூ.205 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பில், தெருவிளக்கு அமைக்க ரூ.225 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போதை ஒழிப்புத் திட்டதிற்கு ரூ.150 கோடி  ஒதுக்கப்பட்டு, போதைப் பொருள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என நிதியமைச்சர் கூறினார்.

கிராமங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.585 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அரசு வேலைகளுக்காக ரூ.230 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்காக ரூ.7614 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பஞ்சாபின் முக்கிய நகரங்களில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.5.983 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுத் துறை ,சிறைத் துறை, பாதுகாப்பு துறை போன்ற  பல்வேறு துறைகளுக்கு நி நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

Tags :
Aam Aadmi PartyBudget 2025Harpal Singh CheemaPunjab
Advertisement
Next Article