புதுக்கோட்டை | பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா!
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை கொண்ட ஆலயமாக இந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் விளங்குகிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை 27 அடி உயரம் கொண்டது.
இக்கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று. இன்று நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். அங்கு பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலும் ஒன்று, என்பது குறிப்பிடத்தக்கது.