தொடர் கனமழை | புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக, புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : கடலூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்நிலையில், புயல் கரையை கடந்துவிட்டாலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தொடர் கனமழை மற்றும் பாதிப்பு காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை டிசம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற இருந்த புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் (இளநிலை மற்றும் முதுநிலை) ஒத்திவைக்கப்படுவதாவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.