Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Puducherry | காலையிலேயே ஷாக்... 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்!

08:29 AM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, யானம் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஒப்புதலின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஏசி வசதி இல்லாத டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி டவுன் பஸ்களில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.13 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் ஏசி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.36ல் இருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின்மூலம் புதுச்சேரி - கடலூர் பஸ் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement
Next Article