Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்து - திமுக பங்கேற்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07:04 PM Jan 25, 2025 IST | Web Editor
Advertisement

ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தினத்திற்கான (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு நாளை மாலை நடைபெறவுள்ளது.

Advertisement

தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

தொடர்ந்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்தது. கடந்தாண்டும் தமிழ்நாடு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தது.

இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மாலை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அளிக்கும் தேநீர் விருந்தில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக புதுச்சேரி மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில் திமுக சட்டமன்றத் உறுப்பினர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DMKGovernorgovernor tea partyPuducherryrepublic day
Advertisement
Next Article