Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Pongal பண்டிகைக்கு கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு... புதுச்சேரி அரசு உத்தரவு!

09:52 PM Jan 10, 2025 IST | Web Editor
Advertisement

பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரியில் வருகிற 16, 17ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகை வருகிற ஜன.14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் கொண்டாட ஏதுவாக, வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : #Kudumbasthan படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த நிலையில், மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக புதுச்சேரியிலும், ஜன.16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் மக்களுக்கு தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிப்ரவரி 1 மற்றும் 8 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article