Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு! - முக்கிய குற்றவாளி தற்கொலை நாடகம்?

11:20 AM Mar 11, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு கொலையாளி விவேகானந்தன் மத்திய சிறையில்
தற்கொலை நாடகம், அதிகபட்ச தண்டனையிலிருந்து தப்பிக்க மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது படுகொலை செய்யப்பட்டார்.  இந்த விவகாரம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்தும்,  குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கக் கோரியும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள்,  அதிமுக சார்பில் முழு அடைப்பு சட்டமன்றம் முற்றுகை,  ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன்,  கருணாஸ் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் 1 வாரத்தில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விவேகானந்தனும்,  கருணாசும் காலாப்பட்டு மத்திய சிறையின் தனி செல்லில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  இந்த நிலையில் சிறைக்கு சென்ற நாளிலிருந்து விவேகானந்தன் குளிக்கும்போது சோப்பை சாப்பிடுவது போலும்,  மூக்கை முடி கொள்வது போலவும்,  சட்டையால் முகத்தை மூடி கொல்வது,  சட்டையால் கழுத்தை
இறுக்கிக்கொள்வது போல் தினமும் தற்கொலை நாடகம் ஆடி சிறை காவலர்களை தொந்தரவு செய்து வருவதாகவும் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையிலிருந்து விடுபடுவதற்காகத் தான் மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடித்து நாடகம் ஆடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
#PondicherrycriminalJustice for ArthiPuducherry
Advertisement
Next Article