For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரி தீ விபத்து - உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு!

08:35 PM Nov 13, 2023 IST | Student Reporter
புதுச்சேரி தீ விபத்து   உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு
Advertisement

புதுச்சேரியில் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டார்.

Advertisement

புதுச்சேரி மாநிலத்தில் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி அன்று இரவு திடீரென பாய்லர் வெடித்ததில் பணியிலிருந்த 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து அவர்களை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சிலர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.  மற்ற தொழிலாளர்கள்  தொடர்ந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் காயம் அடைந்து திவிர சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மாவட்டம் கிளியனூரைச் சேர்ந்த நெடுஞ்செழியன்(33) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த நெடுஞ்செழியனின் மனைவி கார்த்திகா கைக்குழந்தையுடன் கணவன் உயிரிழப்புக்கு நீதி வேண்டி கவுண்டன் பாளையத்தில் உள்ள மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். இதனைத்தொடர்ந்து  இன்று அரசு விடுமுறை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர்  மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என  முதலமைச்சர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர் திரும்பி சென்றார்.

Tags :
Advertisement