#Puducherry-ல் அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு!
புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையமானது வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை அறிவித்தது. ஆனால் இந்த மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. இதனால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் கட்டண உயர்வு தற்போது மாற்றமின்றி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 65 முதல் 85 காசுகள் வரை மின் கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்திற்கு முன்பு 2.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 2.70 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு 101 முதல் 200 யூனிட் மின்சாரத்திற்கு 4 ரூபாயாகவும், 201 முதல் 300 யூனிட் மின்சாரத்திற்கு 6 ரூபாயும், 300 யூனிட்டுகளுக்கு மேல் 7.50 ரூபாயாகவும் கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின்னழுத்த லைன் கட்டணம் யூனிட்டுக்கு 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விவசாய பயன்பாடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த வருடமும் அதே கட்டணத்தை தொடர விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.