Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!

08:50 AM Dec 06, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளை மறுநாள் மத்தியக்குழு வருகை தர உள்ளது.

Advertisement

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக 56 செ.மீ அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதற்கு அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர்.அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கனமழை சேதங்களை ஆய்வு செய்த பின் கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : காசாவில் இஸ்ரேல் இன அழிப்பை நடத்தி வருகிறது – Amnesty International அமைப்பு குற்றச்சாட்டு!

இதேபோல புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் துயரத்தை போக்குவிதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நிவாரண நிதியாக ரூ.600கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து பாதிப்புகளை கணக்கெடுத்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரப்படும் எனவும், அதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்ள வரும்படி கோரப்பட்டுள்ளதாகவும் முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய அரசின் இணைச் செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்தியக் குழுவினர் புதுச்சேரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) வரவுள்ளனர். தொடர்ந்து, வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் டிச. 8, 9 ஆகிய தேதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags :
CycloneFengal Cyclonepudhucherry
Advertisement
Next Article