For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!

06:24 PM Apr 25, 2024 IST | Web Editor
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்
Advertisement

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஜூலை 1ம் தேதி முதல் அச்சேவை தொடங்கப்பட உள்ளது.

Advertisement

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, ஜனவரி முதல் இந்த புதிய விமான நிலைய வளாகம் செயல்படுகிறது. அன்று முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, 2014ஆம் ஆண்டு, பிப்ரவரி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது.

2015ம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. இது முன்னறிவிப்பின்றி 2015ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, மத்திய அரசின் பிராந்திய விமான இணைப்பு திட்டமான 'உதான்' திட்டத்தின் கீழ், விமான சேவைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2017-ஆம் ஆண்டில் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்!

இதையடுத்து, வார இறுதி நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதியில் இருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக புதுச்சேரியில் விமானசேவை தொடங்க திட்டமிட்டிருந்த இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூ மற்றும் ஹைதராபாத்  ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை ஜூலை 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக, ஜூன் மாதத்தில் புக்கிங் தொடங்க உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கவும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
Advertisement