புதுச்சேரி | கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை!
புதுச்சேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத்
07:47 PM Jun 04, 2025 IST | Web Editor
Advertisement
குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். இந்த நிலையில் காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement

அதன்படி அங்குள்ள கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் வெளிக்கிழமை(ஜூன்.07) நடைபெறுகிறது, அதே போல் நாளை மறுநாள்(ஜூன்.06) திருநள்ளாறு ஸ்ரீ தர்பார்ரனேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த இரு கோயில்களில் நடைபெறவுள்ள விழாவிற்கு புதுச்சேரி அரசு காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.