For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

09:33 PM Jun 03, 2024 IST | Web Editor
புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு
Advertisement

புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு ஜூலை 14ம் தேதி நடைபெறும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

Advertisement

புதுச்சேரியில் 2 அரசு செவிலியர் கல்லூரி, 8 தனியார் செவிலியர் கல்லூரி என மொத்தம் 10 கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடாக 450க்கும் மேற்பட்ட பிஎஸ்சி நர்சிங் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் என்ற அமைப்பு வாயிலாக கவுன்சிலங் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.

தனியார் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அக்கல்லூரிகளே நேரடியாக நிரப்பி வந்தன. இந்நிலையில் நாடு முழுவதும் 2023-24ம் கல்வி ஆண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என இந்திய நர்சிங் கவுன்சில் அறிவித்தது.  புதுவை மாணவர்களின் கோரிக்கை ஏற்ற நர்சிங் கவுன்சில் கடந்தாண்டு மட்டும் பொது நுழைவுத்தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு அளித்தது.

இதனையடுத்து  2024-25ம் கல்வி ஆண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இந்த பொதுத்தேர்வுக்கான தேதியை புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 14ம் தேதி நுழைவுத்தேர்வு நடைப்பெறும் எனவும், இதற்கு வரும் 10ஆம் தேதி முதல் செண்டாக் இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement