மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்!
மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த 9 ம் தேதி டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே மக்களவைக் கூட்டம் வரும் 24ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜுன் 26ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப்-ஐ நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநில பாஜக எம்.பி-யான இவர் புதிய எம்.பி-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிகிறது.