Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கலைஞர் 100” விழா நடத்துவதில் பெருமையாக உள்ளது - நடிகர் சூர்யா பேச்சு!

09:22 PM Jan 06, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசியலுக்காகவும், கலைத்துறைக்காகவும் ஈடுப்பட்ட நாட்களை மிகவும் முக்கியமான நாட்களாக பார்க்கிறேன், அவருக்கு இப்படி ஒரு விழா நடத்துவதில் பெருமையாக உள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை சார்பில் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக இன்று (டிச. 06) நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 22000 சீட்டுகள் அமைக்கப்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, ஷிவ் ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகைகள் கௌதமி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன் ராஜா, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளவில்லை.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா பேசியதாவது:

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசியலுக்காகவும், கலைத்துறைக்காகவும் ஈடுப்பட்ட நாட்களை மிகவும் முக்கியமான நாட்களாக பார்க்கிறேன். எம்ஜிஆர், சிவாஜிக்கு வசனங்கள் எழுதினார். சிறையில் இருக்கும் போது எழுதிய ‘பொறுத்தது போதும், பொங்கி எழு’ என்ற வசனம் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அரசியலில் பல மாற்றங்கள், பெண்களுக்கு சொத்து பிரித்து கொடுக்க வேண்டும் என்று பல்வேறு விசயங்களை அவர் பேசியுள்ளார். அப்படிப்பட்ட கருணாநிதிக்கு இப்படி ஒரு விழா நடத்துவதில் பெருமையாக உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
CMO TamilNaduDhanushKalaignar 100KamalhassanKarunanidhiMK StalinNews7Tamilnews7TamilUpdatesRajinikanthTN GovtUdhay Stalin
Advertisement
Next Article