For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்" - பிரியங்கா காந்தி!

10:22 PM Jun 05, 2024 IST | Web Editor
 ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்    பிரியங்கா காந்தி
Advertisement

நான் உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,  இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றாா்.  ரேபரேலி தொகுதியில் 3.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாடு தொகுதியில்  3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  “அவர்கள் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நீங்கள் ஒருபோதும் பின்வாங்காமல் நின்றுகொண்டே இருந்தீர்கள்.  எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நீங்கள் பின்வாங்கவில்லை.  உங்கள் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சந்தேகித்தாலும் நீங்கள் நம்பிக்கையை நிறுத்தவில்லை.

அவர்கள் பரப்பிய பரப்புரைகளில் பெரும் பொய்கள் இருந்தபோதிலும் நீங்கள் சத்தியத்திற்காக போராடுவதை நிறுத்தவில்லை.  அவர்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெறுப்பைப் பரிசளித்தாலும் கூட, அவர்களின் கோபமும் வெறுப்பும் உங்களை வெல்ல நீங்கள் அனுமதிக்கவில்லை.

நீங்கள் உங்கள் இதயத்தில் அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் போராடினீர்கள்.  உங்களை இதுவரை பார்க்க முடியாதவர்கள், இப்போது உங்களைப் பார்க்கிறார்கள். எங்களில் சிலர் எப்பொழுதும் உங்களைப் பார்த்திருக்கிறோம், நீங்கள் எல்லோரையும் விட தைரியசாலி என்று அறிந்திருக்கிறோம். ராகுல் காந்தி, நான் உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement