Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் - திமுக அறிவிப்பு !

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
08:23 AM Mar 08, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் வரும் மார்ச் 12ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும் ! எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

Advertisement

அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

Tags :
AnnouncementdistrictsDMKListMarchMinistersMKStalinProtestralliestamil naduthiruvallur
Advertisement
Next Article