Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநில அரசை கண்டித்து போராட்டம் - கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கைது!

கர்நாடகா அரசைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
01:49 PM Apr 03, 2025 IST | Web Editor
Advertisement

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. விலைவாசியை உயர்த்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்து 24 மணிநேர தொடர் போராட்டத்தை பாஜக அறிவித்தது. மேலும், இந்த ஆட்சியில் விலை உயர்த்தப்பட்ட, பால், பெட்ரோல் உள்ளிட்ட 50 அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலையும் பாஜக வெளியிட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலை பாஜக சார்பில் பகல்-இரவு தர்ணா போராட்டம் தொடங்கியது. இதில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடித்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா கலந்து கொண்டார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்பட கட்சி நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags :
againstarrestedKarnatakaProtestState GovernmentYediyurappa
Advertisement
Next Article