கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு - திருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம்!
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் நகர் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி
மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.