Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணா பல்கலை பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் - சீமான் கைது!

11:37 AM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டன. நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த, நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
Anna universityArrestNTKSeemanSexual assault
Advertisement
Next Article