For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!

09:36 AM Apr 06, 2024 IST | Web Editor
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு  வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

இந்தியாவில் 2040ஆம் ஆண்டுக்குள் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்கும் என லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்படுள்ளது.

Advertisement

நாட்டில் 2040 ஆம் ஆண்டுக்குள் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்கும் என லான்செட் ஆய்வு செய்த சர்வதேச புற்றுநோய்க் கணிப்பில் தெரியவந்துள்ளது.  இதையடுத்து, ஆண்டுக்கு சுமார் 71,000 புதிய பாதிப்புகள் இருக்கும் எனவும் இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் மூன்று சதவிகிதம் புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கும் என ஆய்வில் தெரவிய வந்துள்ளது.  குறிப்பாக,  ஆண்டுதோறும் 33,000 முதல் 42,000 வரை  புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : “விளையாட்டுத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பேச்சு!

இது தொடர்பாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

"உலகில் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 14 லட்சமாக இருந்த புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் 2040 ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு 29 லட்சமாக இருக்கும்.  இதையடுத்து,  குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் புற்றுநோயின் பாதிப்பு அதிகரிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் புற்றுநோயால் கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 3,75,000 இறப்புகள் ஏற்பட்டது.  பெரும்பாலான நோயாளிகள் புற்றுநோயின் பாதிப்பு  மேம்பட்ட நிலைகளில் தான் கண்டறியப்படுகிறார்கள்.  இதன் விளைவாக, சுமார் 65 சதவீதம் (18,000-20,000) நோயாளிகள் புற்றுநோயால் இறக்கின்றனர்.  புற்றுநோயின் பாதிப்பு முன்கூட்டியே தெரிய வந்தால் இறப்புகள் தவிர்க்க இயலும்" இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவர்கள் குழு கூறியதாவது :

"புரோஸ்டேட் புற்றுநோயானது ஆரம்ப நிலைகளில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால்,  மேம்பட்ட நிலைகளில் மட்டுமே நோயாளிகள் சிறுநீர் கழிப்பதில் சிரமம்,  எலும்பு வலி,  விந்து அல்லது சிறுநீரில் ரத்தம் மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும்.  குறிப்பாக, பலவீனமான சிறுநீர் ஓட்டம் மற்றும் வலி அல்லது சிறுநீரில் ரத்தம் போன்றவை  புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.  இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நோயாளிகள் மருத்துவர்களை அணுகி  ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்"

இவ்வாறு மருத்துவர்கள் குழு கூறியுள்ளனர்.

Tags :
Advertisement