Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூற தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

03:50 PM Jan 04, 2024 IST | Jeni
Advertisement

ஜல்லிக்கட்டு காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

Advertisement

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளைஅவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உத்தரவிடக் கோரி மதுரை மானகிரியை சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்:  “நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை!” – நடிகர் சசிகுமார் பேட்டி

இதில் காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்க கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
JallikattuMaduraiMadurai High Courtnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article