Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” - சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

04:56 PM Feb 12, 2024 IST | Web Editor
Advertisement

தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம் உள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர்
நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள்
வைக்கும் வைப்பறையென மூன்றையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.பின்னர் புதிதாக திறந்து வைக்கப்பட்ட உணவகத்தில் காவல் ஆணையர் உணவு உட்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது:

ஆயுதப்படை-1 வளாகத்தில் காவலர் நலன் சிற்றுண்டி விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக 152 மீட்டர் தூரத்திற்கு மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய காவல் சிற்றுண்டி விடுதி சிறிய இடமாக போதிய வசதி இல்லாமல் இருந்ததால் குளிரூட்டி வசதியுடன் புதிய மேஜைகள் நாற்காலிகள் ஒரே நேரத்தில் 50 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பொருட்கள் வைப்பதற்காக ராஜரத்தினம் மைதானம் அருகில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தின் மாடியில் புதிய வைப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த  மூன்று வசதிகளும் இன்று தொடங்கப்பட்டு ஆயுதப்படை காவலர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான காவலர் பணியிடமாற்றம் எல்லாம் முடிந்துள்ளது. 90% சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திஉர்ப்பதாக ஈ மெயில் மூலம் மிரட்டல் விடுத்தது  தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விசாரணையில் சில துப்புக்கள் கிடைத்துள்ளது என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Tags :
BombBomb alertbomb threateningChennainews7 tamilNews7 Tamil UpdatesSandeep Rai RathoreSchoolThreat
Advertisement
Next Article