தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு ; நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
தயாரிப்பாளரும் ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் தனது 86 அவது வயதில் காலமானார்.
ஏவிஎம் சரவணனின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் ஏவிஎம் சரவணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட சிறு செடிகளில் நானும் ஒருவன். இப்போது வளர்ந்து இருக்கிறேன். அந்த வளாகத்தில் நிறைய கற்று இருக்கிறேன். ஏவிஎம் சரவணன், என் சகோதர் போன்றவர். என் தந்தையை போல மதிக்கிறேன். அவரின் பெயர் சொல்லும் பிள்ளைகளின் நானும் ஒருவன்” என்று தெரிவித்துள்ளார்.