“பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்” - காதுகளில் ரிங்காரமிடும் உமா ரமணன் குரல்!
தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடகியாக பயணித்து வந்தவர் உமா ரமணன். இவரது வாழ்வும், திரையுலகம் குறித்த தொகுப்பு குறித்து காணலாம்...
தமிழ் திரையுலக இசையமைப்பாளர் இளையராஜாவின் பல பாடல்களை பாடியவர், உமா ரமணன். சுமார் 35 ஆண்டு காலங்களாக கோலிவுட் திரையுலகில் இருக்கும் இவர், பல பிரபலமான பாடல்களை பாடியிருக்கிறார். பெற்றோரின் விருப்பத்துக்காக முறையாக இசை கற்றுக்கொண்டவர் உமா ரமணன். தனது கல்லூரிக் காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் பல வெல்கிறார்.
ஏ.வி.ரமணன், உமா ரமணன் இருவரும் இணைந்து ‘பிளே பாய்’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடினர். அதன்பின்னர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 1977-ம் ஆண்டு 'கிருஷ்ணலீலா' என்ற படத்தில் ஒரு பாடலை பாடினர். இந்த நேரத்தில்தான் 1980-ல் இளையராஜா இசையில் ‘நிழல்கள்’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து தமிழிலிலும் இவருக்கு பாடல்கள் பாட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இளையராஜா அறிமுகம் செய்து வைத்து பல நாட்கள் திரைத்துறையில் இருந்த ஒரு பாடகி உமா ரமணன். பல சூப்பர் ஹிட் பாடல்களை இளையராஜாவின் இசையில் இவர் பாடியுள்ளார்.
1982-ல் ‘தூறல் நின்னுப் போச்சு’ படத்தில் ‘பூபாளம் இசைக்கும்’ பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து உமா ரமணன் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது என கூறப்படும் பாடல்களில் ஒன்று. அதே ஆண்டு இளையராஜாவுடன் இணைந்து பகவதிபுரம் ரயில்வே கேட் திரைப்படத்தில் ‘செவ்வரளித் தோட்டத்துல’ பாடலை பாடி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து இளையராஜாவுடன் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ‘மேகங் கருக்கையிலே’ பாடலையும், பாட்டுப் பாடவா படத்தில் ‘நில் நில் நில்’ பாடலையும் உமா ரமணன் பாடினார்.
சிவகாசி படத்தில் வரும் "இது என்ன இது என்ன புது மயக்கம்" என்கின்ற பாடலையும், திருப்பாச்சி படத்தில் வரும் "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு" என்கின்ற பாடலையும் பாடியது உமா ரமணன் தான்.
உமா ரமணன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இவரது மகன், விக்ணேஷ் ரமனணும் பாடகர்தான். கடந்த சில நாட்களாகவே உமா, உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் நேற்று (மே 1) இரவு உயிரிழந்துள்ளார்.
சக்கைப்போடு போட்ட பாடல்கள்:
- ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
- அமுதே தமிழே-கோவில் புறா
- கஸ்தூரி மானே-புதுமை பெண்
- நீ பாதி நான் பாதி பெண்ணே-கேளடி கண்மணி
- ஆகாய வெண்ணிலாவே-அரங்கேற்ற வேலை
- வெள்ளி நிலவே-நந்தவன தேர்
- ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி - மகாநதி
- பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு
உமா ரமணனின் மறைவையொட்டி, தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும், அவரது குரலின் ரசிகர்களும் இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.