புரோ கபடி: யுபி யோத்தாஸை வீழ்த்தியது தபாங் டெல்லி!
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் தபாங் டெல்லி - யுபி யோத்தாஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. பின்னர் தபாங் டெல்லி அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. யுபி யோத்தாஸ் வீரர்கள் டெல்லி அணியை வீழ்த்த போராடினர்.
இறுதியில் தபாங் டெல்லி அணி 43-26 என்ற புள்ளி கணக்கில் யுபி யோத்தாஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 9 ஆட்டங்கள் ஆடி 8இல் வெற்றி பெற்ற தபாங் டெல்லி அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 2வது இடத்திலும், 9 ஆட்டங்கில் 4இல் வென்ற யுபி யோத்தாஸ் அணி 8வது இடத்திலும் உள்ளன. மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
10 ஆட்டங்களில் 6இல் வெற்றி பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 5வது இடத்தில் 10 ஆட்டங்களில் 4இல் வென்ற தமிழ் தலைவாஸ் 9வது இடத்திலும் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.