Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
07:38 AM Oct 04, 2025 IST | Web Editor
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
Advertisement

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி – யுபி யோத்தாஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. பின்னர் தபாங் டெல்லி அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. யுபி யோத்தாஸ் வீரர்கள் டெல்லி அணியை வீழ்த்த போராடினர்.

Advertisement

இறுதியில் தபாங் டெல்லி அணி 43-26 என்ற புள்ளி கணக்கில் யுபி யோத்தாஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 9 ஆட்டங்கள் ஆடி 8இல் வெற்றி பெற்ற தபாங் டெல்லி அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 2வது இடத்திலும், 9 ஆட்டங்கில் 4இல் வென்ற யுபி யோத்தாஸ் அணி 8வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 45-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. 11 ஆட்டங்களில் 6இல் வெற்றி பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 6வது இடத்தில் 11 ஆட்டங்களில் 5இல் வென்ற தமிழ் தலைவாஸ் 8வது இடத்திலும் உள்ளன.

 

Tags :
Haryana SteelersKabaddiPKL 2025Pro KabaddiSportsSports UpdateTamil Thalaivas
Advertisement
Next Article