சென்னையில் புரோ கபடி போட்டிகள் - அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி
சென்னையில் புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முதல் டிக்கெட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ் தலைவாஸ் அணி வழங்கியது.
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுகு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.
சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, போட்டிக்கான முதல் டிக்கெட்டை தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் வழங்கியது.
இதையும் படியுங்கள் : கேப்டன் மாற்றம் எதிரொலி - சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI
இந்த போட்டிகள் அனைத்தும், சென்னை வேப்பேரியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை paytm தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.