Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரோ கபடி லீக் | யுபி யோத்தாஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் யுபி யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 
06:44 AM Oct 18, 2025 IST | Web Editor
புரோ கபடி லீக் தொடரில் யுபி யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 
Advertisement

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 51-49 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisement

தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி தமிழ் தலைவாஸை எதிர்கொண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர். ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

முடிவில் அதிரடியாக ஆடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – யுபி யோத்தாஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடி புள்ளிகளை அள்ளினர். இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 42-29 என்ற புள்ளி கணக்கில் யுபி யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Tags :
Jaipur Pink PanthersKabaddiPKL 2025Pro KabaddiSportsSports UpdateUP Yoddhas
Advertisement
Next Article