For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புரோ கபடி லீக் இறுதிப்போட்டி : புனே - ஹரியானா அணிகள் இன்று மோதல்!

09:55 AM Mar 01, 2024 IST | Web Editor
புரோ கபடி லீக் இறுதிப்போட்டி   புனே   ஹரியானா அணிகள் இன்று மோதல்
Advertisement

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டி புனேரி பல்தான் மற்றும் அரியானா ஸ்டீஙர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது.

Advertisement

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், இந்த புரோ கபடி லீக் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதியது.

இதையும் படியுங்கள் : அதிமுகவிற்கு போட்டி திமுக தான்; பாஜக இல்லை -கே.பி. முனுசாமி

இதையடுத்து,  தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த புனேரி பல்தான் மற்றும் ஜெய்பூர் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறின.  அதன் பின்னர், எலிபினேட்டர் சுற்றின் முடிவில் நடந்த அரை இறுதியில் தொடரில் புனேரி பல்தான் அணி 37 - 21 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்சை அணியை வீழ்த்தியது. இதைபோல, அரியானா அணி 31 -27 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்பூர் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில்,  இந்த புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டம் ஜதராபாத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.  இந்த இறுதி போட்டியில் புனேரி பல்தான் மற்றும் அரியானா அணிகள் மோதுகின்றன.  புனேரி பல்தான் அணி தொடர்ந்து இரண்டாவது முறையும், அரியானா அணி முதல் முறையாகவும் இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளன.

இது குறித்து புனேரி பல்தான் அணியில் கேப்டன் அஸ்லாம் இனாம்தார் கூறியதாவது :

"இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெய்பூர் அணியை எதிர்க் கொள்ள வேண்டி இருந்தாலும் கவலைப் பட்டிருக்க மாட்டோம்.  எங்கள் வீரர்கள் இடையே ஒருங்கிணைப்பு, சூழ்நிலையை புரிந்து விளையாடும் தன்மை ஆகியவை உள்ளன. அதனால், அரியானாவையும் எந்த தயக்கமும் இல்லாமல் இயல்பாக எதிர் கொள்வோம்"  இவ்வாறு புனேரி பல்தான் அணியில் கேப்டன் தெரிவித்தார்.

இது குறித்து அரியானா அணியில் கேப்டன் ஜெய்தீப் தஹியா கூறியதாவது :

"உற்சாகமாக இருக்கிறோம். இறுதிப் போட்டில் புனேயின் எந்த ஒரு வீரரையும் இலக்காக கொண்டு விளையாடும் திட்டம் ஏதுமில்லை. மொத்த அணியையும் வெளியே உட்கார வைப்பது நான் எங்கள் ஒரே இலக்கு" இவ்வாறு அரியானா அணியில் கேப்டன் ஜெய்தீப் தஹியா தெரிவித்தார்.

Tags :
Advertisement