For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திடீரென சரிந்து விழுந்த மேடை… நூலிழையில் தப்பிய #PriyankaMohan!

06:57 PM Oct 03, 2024 IST | Web Editor
திடீரென சரிந்து விழுந்த மேடை… நூலிழையில் தப்பிய  priyankamohan
Advertisement

நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயங்களுடன் தப்பினார்.

Advertisement

டாக்டர், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான 'சூர்யாஸ் சாட்டர்டே' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானாவில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதனையடுத்து, அவர் பாதுகாவலர்களால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையே, நடிகை பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இன்று தொரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. தற்போது நான் நலமாக இருக்கிறேன், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். அன்பாக விசாரித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்."

இவ்வாறு நடிகை பிரியங்கா மோகன் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement