For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார்" - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் #RahulGandhi

07:26 PM Nov 23, 2024 IST | Web Editor
 வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார்    மக்களவை எதிர்க்கட்சி தலைவர்  rahulgandhi
Advertisement

வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது. வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 6,22,338 வாக்குகள் பெற்ற நிலையில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி 2,11,407 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், பாஜகவின் நவ்யா 1,09,939 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

https://twitter.com/RahulGandhi/status/1860304767307723133

இந்த நிலையில் , வயநாட்டில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றது தொடர்பாக அவரது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், "வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பிரியங்காவின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமை அடைகிறேன். வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார்" என தெரிவித்துள்ளார்.

Advertisement