Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மத்திய அரசின் கொள்கை முடிவு தொழிலதிபர்கள் சிலருக்கு மட்டுமே பயன்படும்… மக்களுக்கு அல்ல…" - வயநாட்டில் #PriyankaGandhi விமர்சனம்!

01:52 PM Oct 29, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசின் கொள்கை முடிவுகள் தொழிலதிபர்கள் சிலருக்கு மட்டுமே பயன்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்தது.

அதன்படி வரும் நவம்பர் 13-ம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று, பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள் : “எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை” – #EPS பேட்டி!

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்கும் அனைத்துக் கொள்கை முடிவுகளும், அவரது ஐந்து முதல் ஆறு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன்படும், மக்களுக்கு அல்ல.

வயநாடு நிலச்சரிவின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு, உரிய உதவிகளை செய்வதாக உறுதியளித்துச் சென்றார். ஆனால், மாதங்கள் சென்ற பிறகும் கூட, பாஜக தலைமையிலான மத்திய அரசு நிலச்சரிவுப் பகுதிகளின் மறுசீரமைப்புக்கு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணிக்கிறது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
KeralamodiNews7Tamilnews7TamilUpdatesPMOIndiapriyanka gandhiWayanad
Advertisement
Next Article