#China | 40 யுவானுக்கு ஏலம் விடப்பட்ட ஸ்ப்ரைட் பாட்டில் - ஏலம் எடுக்க அதிகளவில் ஆர்வம் காட்டிய மக்கள்!
சீனாவில் குளிர்பான பாட்டிலை தனியார் நிறுவனம் 40 யுவானுக்கு ஏலம் எடுத்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சினாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் அருகே உள்ள பகுதியில்
கோடீஸ்வரர் ஒருவர் உயிரிழந்த பின், அவரின் ரியல் எஸ்டேட், வாகனங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற அனைத்தையும் பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு வருகிறது. இதனை ஆன்லைன் தளமான அலிபாபா ஜூடிசியல் ஏல நிறுவனம் செய்து வருகிறது. இது அலிபாபாவால் என்பவரின் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதன்படி, அந்த கோடீஸ்வரரின் அனைத்து பொருட்களும் பலரால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், அவரின் கடைசி பொருள் ஒன்று தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த பொருளை ஏலம் எடுக்க 360க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அது ஒரு ஸ்ப்ரைட் பாட்டில் தான்.
இதையும் படியுங்கள் :Jammu&Kashmir -ல் இந்தியா கூட்டணி முன்னிலை | டெல்லியில் தொடங்கிய கொண்டாட்டம்!
சீனாவில் ஒரு ஸ்ப்ரைட்டின் விலை பொதுவாக 6 யுவான் ( தோராயமாக ₹ 70) ஆனால், இந்த ஏலத்தில் ஸ்ப்ரைட் பாட்டிலின் விலை 40 யுவானைத் தாண்டியது. ஸ்ப்ரைட் பாட்டிலை ஏலத்தில் விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. ஆனால், இந்த நிறுவனம் சிறிய பொருட்களை ஏலம் விடுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு கோப்பையை 5.6 யுவானுக்கும், ஒரு செட் ஸ்க்ரூடிரைவர்களை 5.6 யுவானுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.