For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் அணிக்கு தலைமை தாங்கும் தமிழர்... யார் இந்த பிரித்விராஜ் தொண்டைமான்?

11:39 AM Jun 19, 2024 IST | Web Editor
பாரீஸ் ஒலிம்பிக்  துப்பாக்கி சுடும் அணிக்கு தலைமை தாங்கும் தமிழர்    யார் இந்த பிரித்விராஜ் தொண்டைமான்
Advertisement

துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஷாட்கன் அணிக்கு தலைமை தாங்குகிறார்.  யார் அவர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.... 

Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜுலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.  இந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தலைமை தாங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றார். ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. 

அனுபவம் வாய்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஷாட்கன் அணிக்கு தலைமை தாங்குகிறார். தேசிய துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 5 பேர் கொண்ட அணியை அறிவித்தது. இதில், ஆண்களுக்கான ட்ராப் போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான், பெண்களுக்கான ட்ராப் போட்டியில் ராஜேஸ்வரி தகுதி பெற்றுள்ளனர். ஆனந்த்ஜீத் சிங் நருகா இந்தியாவின் ஒரே ஆண்களுக்கான ஸ்கீட் ஷீட்டராகவும், அதேசமயம், பெண்கள் ஸ்கீட்டில் ரைசா தில்லான் மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

யார் இந்த பிருத்விராஜ் தொண்டைமான்:

1987 ஜூன் மாதம் 6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த பிருத்விராஜ் தொண்டைமான். இவர் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் ஆகியோரது மகன் ஆவார். ராஜகோபால தொண்டைமான் டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் பிரிவில் பறந்து செல்லும் தட்டுகளை குறிபார்த்து சுடுவதில் வல்லவர். இதே போல அவரது மகன் பிரித்விராஜ் தொண்டைமான் ஷாட்கன் டிராப் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசர் என்று அறியப்படும் பிருத்விராஜ் தொண்டைமான் ட்ராப் ஷூட்டர் பிரிவில் இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் 2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார். 

2023 மார்ச் மாதம் தோஹா ISSF ஷாட்கன் உலகக் கோப்பை ஷாட்கன் ஆடவர் ட்ராப் போட்டியில் வெண்கலப் பதக்கம் (இந்த போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் பிரித்விராஜ் தொண்டைமான்) வென்றுள்ளார்.  தற்போது, பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரித்விராஜ் தொண்டைமான் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், நடப்பு ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதே போல் ராஜேஸ்வரி குமாரி, அனஞ்சித் சிங் நருகா, ரைசா டில்லன், மகேஸ்வரி சவுகான் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச் சுடும் கழகம் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement