Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பிரதிஷ்டைக்கு முன், ராமர் சிலை புகைப்படத்தை பகிர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அயோத்தி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஆவேசம்

12:56 PM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

பிரதிஷ்டைக்கு முன்பு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்படாது என்றும்,  ராம் லல்லா சிலையின் புகைப்படத்தை யார் பகிர்ந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அயோத்தி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.  அன்று பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.  இந்த நிகழ்விற்கு பல முக்கிய தலைவர்கள்,  பிரமுகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று கிரேன் மூலம் ராமர் கோயிலின் கருவறைக்குள் ராம் லல்லாவின் சிலை வைக்கப்பட்டது.  இதன் முதல் புகைப்படத்தை மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வெளியிட்டிருந்தார்.  அதில் தங்க வில் மற்றும் அம்புடன் நிற்கும் ராம் லல்லாவின் முகத்தை மூடிய புகைப்படங்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ராம் லல்லாவின் கண்களை காட்டும் முழு சிலையும் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமியின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

புதிய சிலை இருக்கும் இடத்தில் பிராண பிரதிஷ்டை செய்யும் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.  சிலையின் உடலை தற்போது ஆடைகளால் மூடியுள்ளனர்.  பிரான பிரதிஷ்டை முடிவதற்குள் ராமர் சிலையின் கண்கள் திறக்கப்படாது.  ராமரின் கண்கள் தெரியுமாறு வெளிவந்த சிலை உண்மையான சிலை அல்ல.  சிலையின் புகைப்படங்கள் எப்படி வைரலாகின்றன.  இந்த செயலை யார் செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிலை பிரதிஷ்டைக்கு முன்னரே ராமரின் முழு உருவ புகைப்படம் வெளியானது ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயில் தளத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் ராமரின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதையடுத்து கோயில் அறக்கட்டளை சார்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :
Acharya Satyendra DasAyodhyaConsecration ceremonyenquiryNews7Tamilnews7TamilUpdatesRam Lalla StatueRam MandirRamar Temple
Advertisement
Next Article