சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார். கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பால் இரு தரப்பு உறவில் சலசலப்பு நிலவும் சூழலில் பிரதமர் மோடியின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷிய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.