Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி வருகை – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

06:41 PM Mar 03, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) மாலை 5 மணியளவில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார்.

இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு ஏற்றாற்போல் பயணத்தை திட்டமிட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி, பொதுக்கூட்டம் நடைபெறும் அதை சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாளை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சாலை தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே வாகன ஓட்டுகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
BJPChennaiDroneNews7Tamilnews7TamilUpdatespm narendra modipm tn visitsecurityTraffictraffic change
Advertisement
Next Article